பிரமேம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தற்போது, தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பணி செய்வதற்கு அழைப்பு விடுத்து, அவர் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். தங்கிலீஷ் நடையில் போட்டுள்ள அதன் தமிழ் வடிவம் இதோ.
படத்தில் நடிக்கிறதும், வேலை பண்றதும் யார், யார் என்று நான் அப்பறமா சொல்றேன். படம் தமிழ் தான்.
'புதுமை ஏதும் இல்லாத மூணாவது படத்தை ஆரம்பிக்க போறேன்.
1.) இந்த வாட்டி படத்தில் நடிக்க, பாட்டு பாடவும், நடிக்கவும் தெரிஞ்ச ஒரு பொண்ணை தேடுகிறோம். கர்னாடிக் மியூசிக் தெரிஞ்சா சந்தோசம். ஏன்னா எங்களுக்கு அது தெரியாது. (வயசு 16-26)
2.) இரண்டு உதவி இயக்குனர்களை தேடுகிறோம். 1 பாய், 1 கேர்ள். உண்மையா இருக்கணும். தமிழ் கண்டிப்பா தெரியணும். இப்போ நான் எழுதுகிற தங்கிலீஷ், இங்கிலீஷ் புரியற ஆளா இருக்கணும். அவ்ளோ தான் நாங்க தேடற க்வாலிட்டி.
படத்தில் நடிக்கிறதும், வேலை பண்றதும் யார், யார் என்று நான் அப்பறமா சொல்றேன். படம் தமிழ் தான்.
மெயில் ஐ.டி: puthupadam2017@gmail.com
நோட்: போட்டோ அனுப்புனா மட்டும்... பாட்டு பாடறது தெரியாது... ஞாபகம் வெச்சுக்கோங்க.. போட்டோ ஷாப் எல்லாம் போடாதீங்க.. நாங்க சினிமாவில் இருக்கோம். எங்களுக்கும் சாஃப்டவேர் எல்லாம் தெரியும்" என கூறியுள்ளார்.
இதே ஸ்டேட்டஸை அவர் ஆங்கிலத்திலும் தட்டியுள்ளார். அதை பார்த்து ஸ்ரேயா கோஷல் போன்ற, தமிழ் பாடத் தெரிந்த பெண் அப்ரோச் பண்ணா சந்தோசம் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment