விஜய் நடித்த ‘சுறா’ படத்தின் முதல் தலைப்பு என்ன தெரியுமா? #7YearsofSura
சூப்பர் என்பதற்கு Simplified Universal Player Encoder & Renderer, A Video Converter / Player, OOP என்கிற புரொக்ராமிங்கின் ஒரு கீவேர்ட், 2005ல் வெளியான தெலுங்குப் படம், 2010ல் வெளியான கன்னடப் படம், ஆங்கிலப் படம் என இன்னும் பல தகவல்களைக் கொட்டியது விக்கிப்பீடியா. எதேச்சையாக சூப்பர் பற்றி தேடிய தருணத்தில் கூகுள் காட்டிய இன்னொரு சர்ச் இளைய தளபதி நடித்த 'சுறா'. சும்மா க்ளிக் பண்ணிப் பார்த்ததில் சுறா வெளியாகி இன்றோடு (ஏப்ரல் 30) ஏழு வருடம் ஆகிறது என்கிற செய்தி கிடைத்தது. விஜய்யின் 50வது படத்தை பற்றி பேசாமலிருக்க முடியுமா? அதைப் பற்றி விக்கிப்பீடியா ஸ்டைலிலேயே பார்க்கலாம்.
சுறா (Sura) என்பது 2010ம் ஆண்டின் மத்தியில் வெளியான தமிழ்த் திரைச்சித்திரம் ஆகும். இந்தத் திரைப்படைப்பு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்திலும், திரைக்கதை அமைப்பிலும் வெளியானது. இந்தப் படம் சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட சூரிய படங்களால் (Sun Pictures) வழங்கப்பட்டது. சுறா விஜய்யின் 50வது திரைப்படம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ’உயரமான’ எதிர்பார்ப்புகளை (High Expectations) பூர்த்தி செய்யாமல், பார்வையாளர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களைப் வாங்கிக் கொண்டது. இருந்தாலும் இப்போதும் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் அதிக மக்களால் பார்க்கப்படும் சித்திரம் என்று கூறப்படுகிறது.