Wednesday, 31 January 2018

அட கல்யாணம் பற்றி யோசிக்கலைப்பா... சொல்வது ஸ்ருதிஹாசன்






சென்னை: கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை. சினிமா... சினிமா... அது மீதுதான் என் சிந்தனை என்று நடிகை ஸ்ருதிஹாசன் சொல்லியிருக்காருங்க.

நடிகை ஸ்ருதிஹாசன் தன் காதலன் மைக்கேலுடன் இருக்கும் உலா வருகிறார். புதுப்படங்களை ஒப்புக்கொள்வதில்லை என்று செய்திகள் வந்தப்படியே இருந்தன. அதற்கு தகுந்தார்போல் அவரும் ஒத்துக் கொண்ட சங்கமித்ரா படத்திலிருந்தும் விலகினார்.

காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரவித்து ஸ்ருதி கூறியிருப்பதாவது: "இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை. திருமணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துவிடவேண்டும் என்று நினைக்கலை. இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Sunday, 30 April 2017

விஜய் நடித்த ‘சுறா’ படத்தின் முதல் தலைப்பு என்ன தெரியுமா? #7YearsofSura

விஜய் நடித்த ‘சுறா’ படத்தின் முதல் தலைப்பு என்ன தெரியுமா? #7YearsofSura



சூப்பர் என்பதற்கு Simplified Universal Player Encoder & Renderer, A Video Converter / Player, OOP என்கிற புரொக்ராமிங்கின் ஒரு கீவேர்ட், 2005ல் வெளியான தெலுங்குப் படம், 2010ல் வெளியான கன்னடப் படம், ஆங்கிலப் படம் என இன்னும் பல தகவல்களைக் கொட்டியது விக்கிப்பீடியா. எதேச்சையாக சூப்பர் பற்றி தேடிய தருணத்தில் கூகுள் காட்டிய இன்னொரு சர்ச் இளைய தளபதி நடித்த 'சுறா'. சும்மா க்ளிக் பண்ணிப் பார்த்ததில் சுறா வெளியாகி இன்றோடு (ஏப்ரல் 30) ஏழு வருடம் ஆகிறது என்கிற செய்தி கிடைத்தது. விஜய்யின்  50வது படத்தை பற்றி பேசாமலிருக்க முடியுமா? அதைப் பற்றி விக்கிப்பீடியா ஸ்டைலிலேயே பார்க்கலாம்.



சுறா (Sura) என்பது 2010ம் ஆண்டின் மத்தியில் வெளியான தமிழ்த் திரைச்சித்திரம் ஆகும். இந்தத் திரைப்படைப்பு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்திலும், திரைக்கதை அமைப்பிலும் வெளியானது. இந்தப் படம் சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட சூரிய படங்களால் (Sun Pictures) வழங்கப்பட்டது. சுறா விஜய்யின் 50வது திரைப்படம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ’உயரமான’ எதிர்பார்ப்புகளை (High Expectations) பூர்த்தி செய்யாமல், பார்வையாளர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களைப் வாங்கிக் கொண்டது. இருந்தாலும் இப்போதும் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் அதிக மக்களால் பார்க்கப்படும் சித்திரம் என்று கூறப்படுகிறது.

Saturday, 15 April 2017

அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க, நம்ம ஊர் மலர் டீச்சர்களுக்கு ஒரு சான்ஸ்!

பிரமேம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தற்போது, தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பணி செய்வதற்கு அழைப்பு விடுத்து, அவர் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். தங்கிலீஷ் நடையில் போட்டுள்ள அதன் தமிழ் வடிவம் இதோ.

'புதுமை ஏதும் இல்லாத மூணாவது படத்தை ஆரம்பிக்க போறேன். 
1.) இந்த வாட்டி படத்தில் நடிக்க, பாட்டு பாடவும், நடிக்கவும் தெரிஞ்ச ஒரு பொண்ணை தேடுகிறோம். கர்னாடிக் மியூசிக் தெரிஞ்சா சந்தோசம். ஏன்னா எங்களுக்கு அது தெரியாது. (வயசு 16-26)
2.) இரண்டு உதவி இயக்குனர்களை தேடுகிறோம். 1 பாய், 1 கேர்ள். உண்மையா இருக்கணும். தமிழ் கண்டிப்பா தெரியணும். இப்போ நான் எழுதுகிற தங்கிலீஷ், இங்கிலீஷ் புரியற ஆளா இருக்கணும். அவ்ளோ தான் நாங்க தேடற க்வாலிட்டி.

படத்தில் நடிக்கிறதும், வேலை பண்றதும் யார், யார் என்று நான் அப்பறமா சொல்றேன். படம் தமிழ் தான்.
மெயில் ஐ.டி: puthupadam2017@gmail.com
நோட்: போட்டோ அனுப்புனா மட்டும்... பாட்டு பாடறது தெரியாது... ஞாபகம் வெச்சுக்கோங்க.. போட்டோ ஷாப் எல்லாம் போடாதீங்க.. நாங்க சினிமாவில் இருக்கோம். எங்களுக்கும் சாஃப்டவேர் எல்லாம் தெரியும்" என கூறியுள்ளார்.
இதே ஸ்டேட்டஸை அவர் ஆங்கிலத்திலும் தட்டியுள்ளார். அதை பார்த்து ஸ்ரேயா கோஷல் போன்ற, தமிழ் பாடத் தெரிந்த பெண் அப்ரோச் பண்ணா சந்தோசம் என கூறியுள்ளார்.

அட கல்யாணம் பற்றி யோசிக்கலைப்பா... சொல்வது ஸ்ருதிஹாசன் சென்னை : கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை. சினிமா... சினிமா... அது மீது...